Wednesday, January 8, 2014

ஆம் ஆத்மி புது திட்டம் கைவிடப்பட்ட பஸ்கள் இரவுநேர தங்குமிடமாகிறது

Leave a Comment

புதுடெல்லி: கைவிடப்பட்ட பழைய பஸ்களை, டெல்லியில் திறந்தவெளியில் தூங்குவோருக்கு இருப்பிடமாக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பேற்றவுடன், வீடு இல்லாமல் தெருவில் தங்குவோர்க்கும் இரவு நேர இருப்பிடம் அமைத்துக் கொடுப்பதில் கவனம்
செலுத்தியது. இதற்காக திறந்தவெளியில் தங்குவோர் குறித்த விவரங்களை சேகரிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது. டெல்லி முழுவதும் மொத்தம் 212 இடங்களில் 4,018 பேர் திறந்தவெளியில் தங்குவதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மனீஷ் சிசோடியா தெரிவித்தார்.
இவர்களுக்காக 100 இருப்பிடங்கள் அமைக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கைவிடப்பட்டு, வீணாக நிற்கும் பஸ்களை, இரவு நேர இருப்பிடமாக மாற்ற ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் தங்குவோர்க்கு படுக்கை மற்றும் கம்பளி ஆகியவை வழங்கப்படவுள்ளன.
Source: Dinakaran

0 comments:

Post a Comment